முப்பரிமாண கண் ஊடறிதல் சோதனையானது, பார்கின்சன் நோயினால் பாதிக்கப் படுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளவர்களை, அந்த அறிகுறிகள் ஏற்படுவதற்கு ஏழு ஆண்டுகளுக்கு முன்பே அடையாளம் காண உதவுகிறது.
வளர்ந்து வரும் 'ஒக்குலோமிக்ஸ்' என்ற துறையில், விழித்திரையின் படங்களைப் பயன்படுத்திப் பல்வேறு நரம்பியல் கோளாறுகளின் அறிகுறிகளை அடையாளம் காண்பதற்குஇந்த ஆராய்ச்சி உதவுகிறது.
கண்ணில் ஏற்படும் மாற்றங்கள் இந்த நோயின் ஆரம்பகட்டக் குறிகாட்டியாக இருக்கலாம் என்பதால் இதன் மூலம் ஆரம்ப காலத்தில் நோயறிவதற்கும், ஆரம்பக் கட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய பல நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் உதவும்.