ஹைதராபாத்தில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் ஒரு செயற்கைக் கருவிழியினை வெற்றிகரமாக முப்பரிமாண முறையில் அச்சிட்டுள்ளனர்.
இது இந்தியாவில் முதன்முறையாக ஒரு முயலினுடையக் கண்ணில் பொருத்தப் பட்டது.
முப்பரிமாண முறையில் அச்சிடப்பட்ட மனிதக் கருவிழியானது உயிருள்ளவற்றிற்கு இணக்கமானதோடு, இயற்கையான முறையில், விலங்குகள் சார்ந்தப் பொருட்களால் தயாரிக்கப் படாதது ஆகும்.
இது மனிதக் கருவிழியின் திசுக்களில் இருந்து பெறப்பட்ட மூலக்கூறுகளால் ஆனது.