TNPSC Thervupettagam

முப்பரிமாண முறையில் அச்சிடப்பட்ட முக வடிவமைப்பு பதிய அமைப்புகள்

December 29 , 2023 203 days 154 0
  • சென்னையின் இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனம் ஆனது, கறுப்பு பூஞ்சைத் தொற்றினால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்காக முப்பரிமாண முறையில் அச்சிடப் பட்ட முக வடிவமைப்பு பதிய அமைப்புகளை உருவாக்கியுள்ளது.
  • இந்த நிலையானது, கோவிட்-19 பாதிப்பு கொண்ட நோயாளிகள், கட்டுப்பாடற்ற நீரிழிவு நோயாளிகள், HIV/AIDS மற்றும் பிற மருத்துவ பாதிப்புகள் ஆகியவற்றில் பரவலாக உள்ளது.
  • மியூகோர்மைகோசிஸ் என்றும் அழைக்கப்படுகின்ற கறுப்பு பூஞ்சைத் தொற்று நோய் ஆனது, பாதிக்கப்பட்ட நபர் அவர்களின் முக வடிவமைப்பு அம்சங்களை இழக்க நேரிடும் என்பதால் மோசமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடியது.
  • பெருந்தொற்று காலத்திற்குப் பிறகு இந்தியாவில் சுமார் 60,000 மியூகோர்மைகோசிஸ் பாதிப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
  • இந்த நோயினால் கடுமையாக பாதிக்கப்பட்ட நபர்களில், இந்தப் பூஞ்சையானது முகத்தின் திசுக்களில் ஊடுருவி, முக கட்டமைப்பு அழுகல் மற்றும் சிதைவை ஏற்படுத்துகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்