TNPSC Thervupettagam

முப்பரிமான உருவம் கொண்ட ரூபாய் தாள்கள்

July 5 , 2024 14 days 75 0
  • நிதி, பெண்கள் கல்வி மற்றும் மருத்துவ அறிவியலில் முன்னோடிகளாக விளங்கும் நபர்களின் முப்பரிமாண உருவப்படங்களைக் கொண்ட தனது முதல் புதிய ரூபாய் தாள்களை ஜப்பான் அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
  • ஒருவர் பார்க்கும் கோணத்தைப் பொறுத்து வெவ்வேறு திசைகளை எதிர்கொள்ளும் வகையில் உருவப் படங்களின் முப்பரிமாணங்களை உருவாக்க ஒரு தனித்துவமானத் தொழில்நுட்பத்தினை அவர்கள் பயன்படுத்தியுள்ளனர்.
  • 10,000-யென் மதிப்புக் கொண்ட தாளில் "ஜப்பானிய முதலாளித்துவத்தின் தந்தை" என்று அழைக்கப்படும் எய்ச்சி ஷிபுசாவா (1840-1931) அவர்களின் உருவம் அச்சிடப் பட்டுள்ளது.
  • 5,000-யென் மதிப்புக் கொண்ட தாளில் பெண் கல்வியில் முன்னோடியான உமேகோ சுடா (1864-1929) சித்தரிக்கப்பட்டுள்ளார்.
  • 1,000 யென் மதிப்பு கொண்ட தாளில் ஷிபாசபுரோ கிடாசாடோ (1853-1931) சித்தரிக்கப் பட்டுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்