நிதி, பெண்கள் கல்வி மற்றும் மருத்துவ அறிவியலில் முன்னோடிகளாக விளங்கும் நபர்களின் முப்பரிமாண உருவப்படங்களைக் கொண்ட தனது முதல் புதிய ரூபாய் தாள்களை ஜப்பான் அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
ஒருவர் பார்க்கும் கோணத்தைப் பொறுத்து வெவ்வேறு திசைகளை எதிர்கொள்ளும் வகையில் உருவப் படங்களின் முப்பரிமாணங்களை உருவாக்க ஒரு தனித்துவமானத் தொழில்நுட்பத்தினை அவர்கள் பயன்படுத்தியுள்ளனர்.
10,000-யென் மதிப்புக் கொண்ட தாளில் "ஜப்பானிய முதலாளித்துவத்தின் தந்தை" என்று அழைக்கப்படும் எய்ச்சி ஷிபுசாவா (1840-1931) அவர்களின் உருவம் அச்சிடப் பட்டுள்ளது.
5,000-யென் மதிப்புக் கொண்ட தாளில் பெண் கல்வியில் முன்னோடியான உமேகோ சுடா (1864-1929) சித்தரிக்கப்பட்டுள்ளார்.
1,000 யென் மதிப்பு கொண்ட தாளில் ஷிபாசபுரோ கிடாசாடோ (1853-1931) சித்தரிக்கப் பட்டுள்ளார்.