அண்மையில் வெளியிடப்பட்ட நைட் பிராங்க் வள அறிக்கை 2018-ன் படி (Knight Frank Wealth Report 2018), உலகின் 20 முன்னணி செலவுமிகு நகரங்கள் (costliest cities) பட்டியலில் மும்பை 16வது செலவுமிகு நகரமாக பட்டியலிப்பட்டுள்ளது.
2016 ஆம் ஆண்டு இப்பட்டியலில் மும்பை 15-வது இடத்தில் இருந்தது.
உலகின் முன்னணி செலவுமிகு நகரங்களுள் மேற்கு ஐரோப்பாவிலுள்ள இறையாண்மையுடைய தேச நகரமான (sovereign city-state) மொனாக்கோ (Monaco) முதலிடத்தில் உள்ளது. அதனைத் தொடர்ந்து ஹாங்காங் நகரம் இரண்டாம் இடத்தில் உள்ளது.
அமெரிக்காவின் நியூயார்க் மற்றும் இங்கிலாந்தின் லண்டன் ஆகியவை முறையே 3 வது மற்றும் 4வது இடத்தில் உள்ளன.
நகரத்தினுடைய செல்வ வளம், முதலீடு, வாழ்க்கை முறை, நகரின் எதிர்காலம் ஆகிய நான்கு முக்கிய அளவுருக்களின் அடிப்படையில் இந்தக் குறியீடு கணக்கிடப்பட்டுள்ளது.
இந்தியாவின் பிற முக்கிய நகரங்களான டெல்லி, சென்னை மற்றும் பெங்களூரு ஆகியவை இப்பட்டியலில் முதல் 100 இடங்களில் இடம் பிடித்துள்ளன.