TNPSC Thervupettagam

மும்பை பயங்கரவாத தாக்குதலின் (26/11) 10-ம் ஆண்டு நிறைவு

November 28 , 2018 2187 days 735 0
  • இந்தியா நவம்பர் 26, 2018 அன்று 26/11 மும்பை பயங்கரவாத தாக்குதலின் 10-வது ஆண்டு நிறைவை அனுசரித்தது.
  • இந்த தாக்குதலில் ஈடுபட்டவர்களை கண்டுபிடிக்க உதவுபவர்களுக்கு 5 மில்லியன் டாலர் பரிசை அமெரிக்கா அறிவித்துள்ளது.
  • பத்து ஆண்டுகளுக்கு முன்னர் 2008-ல் லஷ்கர்-இ-தொய்பாவைச் சேர்ந்த 10 தீவிரவாதிகள் மும்பையில் கடற்வழியாக வந்து மூன்று நாட்களுக்கு நீடித்த ஒருங்கிணைந்த தாக்குதலை நடத்தினர்.
  • இந்த தீவிரவாத நடவடிக்கைக்குப் பதிலடியாக தாக்குதல் நடத்தியவர்களை பிடிப்பதற்காக தேசிய பாதுகாப்புப் படையினரால் தாஜ் ஓட்டலில் “பிளாக் டொர்னாடோ நடவடிக்கை” நடத்தப்பட்டது.
  • தாக்குதல் நடத்தியவர்களில் உயிருடன் பிடிக்கப்பட்ட தீவிரவாதி அஜ்மல் கசாப் மட்டுமே ஆவான். நவம்பர் 21, 2012 அன்று புனேயின் எரவாடா சிறைச்சாலையில் அஜ்மல் தூக்கிலிடப்பட்டான்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்