தேசிய வனவிலங்கு வாரியமானது (NBWL - National Wildlife Board) மும்பை-நாக்பூர் நெடுஞ்சாலைக்கான இறுதி அனுமதியை வழங்கியுள்ளது.
இந்த நெடுஞ்சாலையானது கதேபூர்ணா மற்றும் கரன்ஜா சோஹல் கலைமான் வனவிலங்குச் சரணாலயங்களின் 10 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட சுற்றுச்சூழல் பாதுகாப்பு மண்டலத்தின் வழியாகச் செல்கின்றது.
NBWL பற்றி
NBWL என்பது வனவிலங்குப் பாதுகாப்புச் சட்டம், 1972ன் கீழ் உருவாக்கப்பட்ட ஒரு சட்டப்பூர்வ அமைப்பாகும்.
இது பிரதம அமைச்சரால் தலைமை தாங்கப்படுகின்றது.
NBWL-ன் அனுமதி இல்லாமல் தேசியப் பூங்காக்கள் மற்றும் வனவிலங்குச் சரணாலயங்களின் எல்லைகளை மாற்றியமைக்க முடியாது.
இது பிரதம மந்திரி உள்பட 47 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது.
இது 3 நாடாளுமன்ற உறுப்பினர்கள் (2 மக்களவை உறுப்பினர்கள் மற்றும் 1 மாநிலங்களவை உறுப்பினர்), அரசு சாரா அமைப்புகளைச் சேர்ந்த 5 உறுப்பினர்கள், சூழலியல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு வல்லுநர்கள் மற்றும் சுற்றுச்சுழல் அமைப்புகளைச் சேர்ந்த 10 உறுப்பினர்கள் ஆகியோரையும் கொண்டுள்ளது.