TNPSC Thervupettagam

மும்பைப் பங்குச் சந்தையின் 150 ஆம் ஆண்டு நிறைவு

April 20 , 2025 3 days 64 0
  • ஆசியாவின் மிகவும் பழமையான பங்குச் சந்தையான BSE நிறுவனம் தனது 150வது ஆண்டு நிறைவு விழாவை சமீபத்தில் கொண்டாடியது.
  • உலகின் நான்காவது பெரிய பங்குச் சந்தையான BSE ஆனது, 1875 ஆம் ஆண்டு ஜூலை 09 ஆம் தேதியன்று தெற்கு மும்பையில் டவுன் ஹாலுக்கு அருகில் நிறுவப்பட்டது.
  • 1855 ஆம் ஆண்டில், பங்கு தரகர்கள் பருத்தியை வாங்கவும், விற்கவும் ஆலமரத்தடியில் கூடினர்.
  • 1865 ஆம் ஆண்டில், ஒழுங்கமைக்கப்படாத பங்குச் சந்தை மிகப் பெரிய ஏற்றத்தைக் கண்டது.
  • அப்போது மும்பையில் 31 வங்கிகள், 62 கூட்டுப் பங்கு நிறுவனங்கள், 20 காப்பீட்டு நிறுவனங்கள் மற்றும் 16 பருத்தி அழுத்தித் தொகுக்கும் நிறுவனங்கள் இருந்தன.
  • 1957 ஆம் ஆண்டில், BSE நிறுவனத்திற்கு பத்திரங்கள் (ஒழுங்குமுறை) சட்டத்தின் (SCRA) கீழ் நிரந்தர அங்கீகாரம் வழங்கப்பட்டது.
  • 1986 ஆம் ஆண்டில், இந்தியாவின் முதல் பங்குக் குறியீடான S&P BSE சென்செக்ஸ் 1,000 என்ற அடிப்படைப் புள்ளியுடன் அதிகாரப் பூர்வமாக தொடங்கப் பட்டது.
  • 2017 ஆம் ஆண்டில், BSE இந்தியாவின் முதல் பட்டியலிடப்பட்டப் பங்குச் சந்தையாக மாறியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்