TNPSC Thervupettagam

முரா – திராவா – தனூபே

September 25 , 2021 1031 days 536 0
  • முரா – திராவா – தனூபே பகுதியானது ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பினால் (யுனெஸ்கோ) உலகின் முதலாவது 5 நாடுகளின் பகுதிகளை உள்ளடக்கிய ‘உயிர்க் கோளக் காப்பகம்’ என அறிவிக்கப்பட்டுள்ளது.
  • இந்த உயிர்க்கோளக் காப்பகமானது முரா, திராவா மற்றும் தனூபே ஆறுகளின் 700 கிலோ மீட்டர் பகுதியை உள்ளடக்கியதாகும்.
  • இந்தக் காப்பகமானது ஆஸ்திரியா, சுலோவேனியா, குரோசியா, ஹங்கேரி மற்றும் செர்பியா ஆகிய நாடுகள் வரை பரவிக் காணப்படுகிறது.

இந்தியாவிலுள்ள உயிர்க்கோளக் காப்பகங்கள்

  • தற்போது இந்தியாவில் 18 உயிர்க்கோளக் காப்பகங்கள் உள்ளன.
  • இந்தியாவிலுள்ள 12 உயிர்க்கோளக் காப்பகங்கள் யுனெஸ்கோவின் மனிதன் மற்றும் உயிர்க் கோளக் காப்பகத் திட்டத்தின் பட்டியலில் இடம் பெற்றுள்ளன.
  • பன்னா உயிர்க்கோளக் காப்பகமானது (மத்தியப் பிரதேசம்) சமீபத்தில் இந்தப் பட்டியலில் சேர்க்கப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்