மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் கீழ் உள்ள ஒரு தன்னாட்சி நிறுவனமான புனேவில் உள்ள அகர்கர் ஆராய்ச்சி மையமானது சமீபத்தில் முரைனா புல் என்ற ஒரு புதிய இனத்தைக் கண்டறிந்துள்ளது.
இந்தப் புதிய மற்றும் அதிக தாங்குந் தன்மை கொண்ட இனமானது மேற்குத் தொடர்ச்சி மலையில் கோவாவில் கண்டறியப் பட்டுள்ளது.
இது வெப்ப மண்டல மற்றும் துணை வெப்ப மண்டலப் பகுதிகளில் காணப்படும் ஒரு வகை புல் இனமாகும்.