1969 ஆம் ஆண்டில் நோபல் பரிசு பெற்ற இயற்பியல் வல்லுநரான முர்ரே கெல் மேன் என்பவர் அமெரிக்காவில் உள்ள நியூ மெக்சிகோவில் காலமானார். அவருடைய வயது 89 ஆகும்.
இவர் அணுவகத் துகள்களின் சுழலும் தன்மை, மின் தன்மை மற்றும் இதர பண்புகளை அடிப்படையாகக் கொண்டு அணுவகத் துகள்களை 8 எளிமையான குழுக்களாக வகைப்படுத்துவதற்கான ஒரு முறையைக் கண்டறிந்தார்.
அறிவொளியைப் பெறுவதற்கான புத்தரின் எண்வழிப் பாதைகளின் நினைவாக, இவர் இந்த முறைக்கு “எண் வழிகள்” என்று பெயரிட்டார்.
இயற்பியல் முறையில் பிரபஞ்சம் குறித்த நமது புரிதலுக்கு ஒரு அடிப்படையை உருவாக்கும் ‘குவார்க்ஸ்’ என்ற கோட்பாட்டை உருவாக்கிய முதலாவது அறிவியலாளர் இவராவார்.