ஒட்டு மொத்தமாக, வங்கிகள் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்களால் (NBFCs) வழங்கப் பட்ட முறைசார் தங்கக் கடன்கள் மதிப்பானது நடப்பு நிதியாண்டில் (FY25) 10 டிரில்லியன் ரூபாய்க்கு மேலான மதிப்பினை எட்ட உள்ளது.
இது 2027 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் 15 டிரில்லியன் ரூபாயினை எட்டும்.
2020 மற்றும் 2024 ஆம் நிதியாண்டுகளுக்கு இடையில் 25 சதவீதம் என்ற அளவில் கூட்டு வருடாந்திர வளர்ச்சி விகிதத்தில் (CAGR) தங்கக் கடன் பிரிவு விரிவடைந்துள்ளது.
NBFC நிறுவனங்களுள், தங்கக் கடன் பதிவு ஆனது 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் 83 சதவீதமாக இருக்கும் முதல் நான்கு நிறுவனங்களில் அதிகமாகப் பதிவாகியுள்ளது.