TNPSC Thervupettagam

முள்ளுடைய வெள்ளை இறாலின் புதிய இனங்கள்

May 6 , 2023 441 days 230 0
  • அறிவியலாளர்கள் கர்நாடகா மற்றும் கோவாவில் முள்ளுடைய வெள்ளை இறால்கள் அல்லது ஸ்பினிகவுடாடன்களின் இரண்டு புதிய இனங்களைக் கண்டுபிடித்துள்ளனர்.
  • இவை இதுவரை அறியப்பட்ட பிற இந்திய இறால் இனங்களிலிருந்து மரபணு ரீதியாக வேறுபட்டவையாகும்.
  • இவற்றிற்கு ‘லெப்டெஸ்தீரியா சாளுக்யே’ மற்றும் ‘லெப்டெஸ்தீரியா கோமந்தகி’ என்று பெயரிடப் பட்டுள்ளது.
  • லெப்டெஸ்தீரியா சாளுக்கியே இனத்திற்கு சாளுக்கிய வம்சத்தின் பெயரால் பெயரிடப் பட்டுள்ளது.
  • லெப்டெஸ்தீரியா கோமந்தகி இனத்திற்கு கோவாவின் பெயரால் பெயரிடப்பட்டுள்ளது.
  • வெள்ளை இறால்கள் மட்டி இனம் அல்ல, ஆனால் அவற்றின் உடல் இருமுகப்பு ஓடு அல்லது ஓட்டினுள் (காரபேஸ்) இருப்பதால் அவற்றைப் போலவே இருக்கும்.
  • அண்டார்டிகாவைத் தவிர உலகெங்கிலும் உள்ள தற்காலிக நன்னீர் நிலைகளில் இவை காணப்படுகின்றன.
  • அவற்றின் அலகு போன்ற பகுதியின் (ரோஸ்ட்ரம்) நுனியில் முதுகெலும்பு இருப்பது மற்ற ஓடுகளை உடைய மீன் இனங்களின் குடும்பங்களிலிருந்து வெள்ளை இறால்களை வேறுபடுத்திக் காட்டுகிறது.
  • இது தலையின் அலகு போன்ற ஒரு மீட்சியாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்