வட அமெரிக்காவில் ஏற்பட்ட முழு சூரிய கிரகணம் ஆனது மெக்சிகோ, அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய நாடுகளில் தென்பட்டது.
பூமிக்கும் சூரியனுக்கும் நடுவில் நிலவு நகரும் போது சூரிய கிரகணம் ஏற்படுகிறது.
நிலவு ஆனது சூரியனின் ஒளியை முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ மறைக்கும்போது உலகின் சில பகுதிகளில் பெரும் நிழலை ஏற்படுத்துகிறது.
முழு சூரிய கிரகணம், வருடாந்திர சூரிய கிரகணம், பகுதியளவு சூரிய கிரகணம் மற்றும் கலப்பு சூரிய கிரகணம் உட்பட நான்கு வெவ்வேறு வகையான சூரிய கிரகணங்கள் உள்ளன.
நிலவானது சூரிய ஒளியை முழுவதுமாக மறைக்கும் போது, அந்த நேரத்தில் நிலவின் நிழலின் மையத்தில் உள்ள பகுதிகள் முழு சூரிய கிரகணத்திற்கு உள்ளாகின்றன.
பூமியில் உள்ள ஒரு குறிப்பிட்ட இடம் ஆனது 400 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே முழு சூரிய கிரகணத்தைக் காண்கிறது.