TNPSC Thervupettagam

முழுமையான அளவிலான கடைசி பொது மூதாதை இனம்

August 1 , 2024 114 days 230 0
  • சுமார் 4.2 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய ஒரு மூதாதை இனத்திடம் இருந்து பூமியில் உயிர்கள் தோன்றியதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
  • இன்றைய உயிரினங்களின் மரபணுக்களை பகுப்பாய்வு செய்வதன் மூலம் அறிவியல் ஆய்வாளர்கள் ஒரு முழுமையான பொது மூதாதை (LUCA) இனம் தோன்றியதை சுட்டிக் காட்டியுள்ளனர்.
  • பூமி தோராயமாக 4.5 பில்லியன் ஆண்டுகள் பழமையானது என்ற தகவலானது, பூமி அதன் ஆரம்ப நிலையில் இருந்த போதே உயிர்கள் தோன்றியதைக் குறிக்கிறது.
  • ஆக்சிஜனின் தோற்றமானது புவிக்கோளின் பரிணாம காலவரிசையில் ஒப்பீட்டளவில் தாமதமாக நிகழ்ந்தது என்ற ஒரு நிலைமையில் இது 3 பில்லியன் ஆண்டுகளுக்கு முந்தையதாக இருக்கலாம்.
  • நுண்ணுயிர்ப் படிமங்கள் வடிவில் உள்ள சான்றுகளானது, சுமார் 3.48 பில்லியன் ஆண்டுகளுக்கு முந்தையவையாகும்.
  • LUCA எனப்படுகின்ற இந்த சிக்கலான ஒரு உயிரினமானது மிகவும் நவீன காலமான புரோகாரியோட்டுகளிலிருந்து (நிலைக் கருவற்ற உயிரி) மிகவும் வேறுபட்டதல்ல.
  • ஆனால் இது 4.2 பில்லியன் ஆண்டுகளுக்கும் முந்தைய ஆரம்ப கால நோயெதிர்ப்புச் சக்தியைக் கொண்டிருந்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்