சுமார் 4.2 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய ஒரு மூதாதை இனத்திடம் இருந்து பூமியில் உயிர்கள் தோன்றியதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
இன்றைய உயிரினங்களின் மரபணுக்களை பகுப்பாய்வு செய்வதன் மூலம் அறிவியல் ஆய்வாளர்கள் ஒரு முழுமையான பொது மூதாதை (LUCA) இனம் தோன்றியதை சுட்டிக் காட்டியுள்ளனர்.
பூமி தோராயமாக 4.5 பில்லியன் ஆண்டுகள் பழமையானது என்ற தகவலானது, பூமி அதன் ஆரம்ப நிலையில் இருந்த போதே உயிர்கள் தோன்றியதைக் குறிக்கிறது.
ஆக்சிஜனின் தோற்றமானது புவிக்கோளின் பரிணாம காலவரிசையில் ஒப்பீட்டளவில் தாமதமாக நிகழ்ந்தது என்ற ஒரு நிலைமையில் இது 3 பில்லியன் ஆண்டுகளுக்கு முந்தையதாக இருக்கலாம்.
நுண்ணுயிர்ப் படிமங்கள் வடிவில் உள்ள சான்றுகளானது, சுமார் 3.48 பில்லியன் ஆண்டுகளுக்கு முந்தையவையாகும்.
LUCA எனப்படுகின்ற இந்த சிக்கலான ஒரு உயிரினமானது மிகவும் நவீன காலமான புரோகாரியோட்டுகளிலிருந்து (நிலைக் கருவற்ற உயிரி) மிகவும் வேறுபட்டதல்ல.
ஆனால் இது 4.2 பில்லியன் ஆண்டுகளுக்கும் முந்தைய ஆரம்ப கால நோயெதிர்ப்புச் சக்தியைக் கொண்டிருந்தது.