2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 01 ஆம் தேதி அமலுக்கு வந்த முத்தலாக் தடைச் சட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்டதை நினைவு கூரும் விதமாக இத்தினம் அனுசரிக்கப்படுகிறது.
இது 2021 ஆம் ஆண்டில் முதல் முறையாக அனுசரிக்கப்பட்டது.
ஷயாரா பானோ மற்றும் மத்திய அரசிற்கு இடையிலான வழக்கு தான் இந்தச் சட்டத்தினைக் கொண்டு வருவதற்கான அடிக்கல்லினை நாட்டியது.
முத்தலாக் என்றும் குறிப்பிடப்படுகின்ற தலாக்-இ-பித்தாத், ஒரு முஸ்லீம் ஆண் "தலாக்" என்ற வார்த்தையை எந்த விதத்திலாகினும் மூன்று முறை உச்சரிப்பதன் மூலம் தனது திருமணத்தை முறிக்க அனுமதிக்கின்ற உடனடி விவாகரத்து முறையாகும்.