1973 ஆம் ஆண்டு குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் (CrPC) 125வது சட்டப் பிரிவின் கீழ் விவாகரத்து செய்யப்பட்ட முஸ்லிம் பெண்களின் பராமரிப்பு உரிமையினை உச்ச நீதிமன்றத்தின் சமீபத்திய தீர்ப்பு உறுதி செய்துள்ளது.
இந்த வழக்கு ஆனது முகமது அப்துல் சமத் மற்றும் தெலுங்கானா மாநில அரசு இடையிலான வழக்கு என்று அழைக்கப்படுகிறது.
முஸ்லீம் பெண்கள் (விவாகரத்து உரிமைகள் பாதுகாப்பு) சட்டமானது (MWA) 1986 ஆம் ஆண்டில் இயற்றப்பட்டது.
இந்தச் சட்டம் ஆனது, விவாகரத்து செய்யப்பட்ட முஸ்லீம் பெண்கள் இத்தாத் காலத்தின் போது பராமரிப்பு வசதியினைக் கோருவதற்கான ஒரு புதிய உரிமையை உருவாக்கியதோடு, எதிர்காலத்திற்கான ஒரு நியாயமான மற்றும் தக்கப் பராமரிப்பு வசதியினைப் பெறுவதற்கான வாய்ப்பினையும் உருவாக்கியது.
ஆனால், இந்த விதியானது 1973 ஆம் ஆண்டு குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 125 பிரிவுடன் முரண்படுகிறது.