ஆயுதப்படை வீரர்களின் தன்னலமற்றக் கடமை மற்றும் தியாகங்களுக்காக வேண்டி அவர்களுக்கு மரியாதை செலுத்துவதையும், இத்தகையத் துணிச்சலானவர்களின் மிக நெருங்கிய குடும்பத்தினர்களுடனான ஒற்றுமையை வலுப்படுத்துவதையும் இது ஒரு நோக்கமாகக் கொண்டுள்ளது.
முதலாவது மூத்த ஆயுதப்படை வீரர்கள் தினம் ஆனது 2017 ஆம் ஆண்டில் ஏற்பாடு செய்யப்பட்டது.
1953 ஆம் ஆண்டு இந்த நாளில் தான், சுதந்திரத்திற்குப் பிறகு இந்திய இராணுவத்தின் முதல் தளபதியாக இருந்த பீல்ட் மார்ஷல் K.M.கரியப்பா அவரது மகத்தான ராணுவச் சேவைக்குப் பிறகு ஓய்வு பெற்றார்.