TNPSC Thervupettagam

மூத்த குடிமக்களுக்கான வரைவுக் கொள்கை

February 2 , 2022 1031 days 2937 0
  • மூத்த குடிமக்களுக்கான வரைவுக் கொள்கையை தமிழக அரசு உருவாக்கியுள்ளது.
  • இந்தக் கொள்கையின் கீழ், கல்வி நிறுவனங்கள், துறை வல்லுநர்கள் மற்றும் குடிமைச் சமூக அமைப்புகளுடன் இணைந்து பணியாற்ற அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
  • அரசியலமைப்பின் 41வது விதியின் அடிப்படையின் கீழ் இந்தக் கொள்கையானது உருவாக்கப் பட்டது.
  • இந்தக் கொள்கையானது சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள், சுகாதாரம் மற்றும் ஊட்டச் சத்து, வருமானப் பாதுகாப்பு, பாதுகாப்பு, வாழ்வாதாரம், பாதுகாப்பான வீட்டு வசதிகள் மற்றும் சுற்றுச்சூழல், கல்வி, பேரிடர் மேலாண்மை மற்றும் ஆராய்ச்சி மற்றும் ஆவணப்படுத்துதல் ஆகியவற்றில் கவனம் செலுத்தும்.
  • இது மூத்த குடிமக்களின் நலனுக்கான ஒரு இயக்குனரகத்தை உருவாக்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

குறிப்பு

  • புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள, “இந்தியாவில் முதியோர், 2021” என்ற ஒரு அறிக்கையின்படி, தமிழ்நாட்டின் மக்கள் தொகையில் 13.6% மூத்த குடிமக்கள் ஆவர்.
  • இந்தியாவின் முதியோர் எண்ணிக்கையில் கேரளாவுக்கு அடுத்தபடியாக தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது.
  • மேலும், 2031ஆம் ஆண்டுக்குள் மூத்த குடிமக்களின் எண்ணிக்கையானது 18.2% ஆக உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்