மூன்றாவது சர்வதேச முதலீட்டாளர்களுக்கான இந்திய மன்றம்
October 30 , 2017 2630 days 843 0
மூன்றாவது சர்வதேச முதலீட்டாளர்களுக்கான இந்திய மன்றத்தின் கூடுகை புதுடெல்லியில் நடந்தது.
முதலீட்டாளர்கள் மற்றும் முதலீடு பெறுபவர்கள் பங்குபெறும் இந்த சர்வதேச நிகழ்வை இந்தியாவின் பழமையான வர்த்தக மற்றும் தொழிற்துறை உச்ச அமைப்பான அசோசேம் (ASSOCHAM) ஒருங்கிணைக்கிறது.
இந்த நிகழ்வு மத்திய வெளியுறவு அமைச்சகம், தொழிற் கொள்கை உருவாக்கல் துறை (DIPP-Department of Industrial Policy and Promotion) மற்றும் மத்திய வணிக மற்றும் தொழிற்துறை அமைச்சகம் ஆகியவற்றின் அதிகாரப்பூர்வ ஆதரவோடு நடத்தப்படுகிறது..
2015 ஆம் ஆண்டு இந்த மன்றம் தொடங்கப்பட்டது.
இந்த (2017) ஆண்டிற்கான மன்றத்தின் கருப்பொருள் – “கருத்தாக்கு, புத்தாக்கு, செயல்படுத்து மற்றும் இந்தியாவில் முதலீடு செய்”.