TNPSC Thervupettagam

மூன்றாவது தகவல் தொழில்நுட்பப் பெருவழிப் பாதை சீனா

March 12 , 2019 2087 days 614 0
  • இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்களிடையே கூட்டாண்மையை ஏற்படுத்துவதற்காக இந்தியா தனது மூன்றாவது தகவல் தொழில்நுட்பப் பெருவழிப்பாதையை சீனாவில் தொடங்கியுள்ளது.
  • தகவல் தொழில்நுட்ப பெருவழிப்பாதையை மேம்படுத்துவதற்கு உதவுவதற்காக தேசிய மென்பொருள் மற்றும் சேவைகள் நிறுவனங்களின் மன்றமானது (National Association of Software and Services Companies - NASSCOM) சீனாவின் ஜியான்ங்சு மாகாணத்தின் சுகோ நகரத்துடன் ஒரு கூட்டாண்மையை ஏற்படுத்தியுள்ளது.
  • இந்தப் பெருவழிப் பாதையானது இந்திய நிறுவனங்கள் சீன நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தும்.
  • இதற்கு முன்பு டாலியன் மற்றும் கியூயாங் ஆகிய இரு நகரங்களில் இந்தப் பெருவழிப் பாதைகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்