2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 07 ஆம் தேதியன்று தொடங்கிய தற்போதையப் பருவமழை இடைவேளையானது இறுதியாக ஆகஸ்ட் 18 ஆம் தேதியன்று முடிவடைந்தது.
தற்போதையப் பருவமழை இடைவேளையானது 2002 மற்றும் 2009 ஆகிய ஆண்டுகளுக்குப் பிறகு ஏற்பட்ட இந்த நூற்றாண்டின் மூன்றாவது நீண்டப் பருவமழை இடைவேளையாக கருதப் படுகிறது.
பருவமழை இடைவேளை என்பது பருவமழைக் காற்று மண்டலம் வடக்கு நோக்கி நகரும் போது ஏற்படும்.
இது இமயமலை அடிவாரங்கள் மற்றும் கிழக்கு இந்தியாவின் சில பகுதிகளில் மழைப் பொழிவை அதிகரிக்கிற அதே நேரத்தில் இது நாட்டின் மற்ற பகுதிகளில் மழைப் பொழிவினை மட்டுப்படுத்துகிறது.
இது குறிப்பாக மையப் பருவமழை மண்டலப் பகுதி அல்லது மேற்கில் குஜராத்தில் இருந்து கிழக்கில் மேற்கு வங்காளம் மற்றும் ஒடிசா வரை நீண்டு காணப்படும் பகுதியில் நிகழ்கிறது.
கடந்த 73 ஆண்டுகளில், 10 நாட்களுக்கு மேல் இந்த இடைவேளை நீட்டிக்கப் பட்டதாக 10 நிகழ்வுகள் பதிவாகியுள்ளன.
1972 ஆம் ஆண்டில் (17 நாட்கள்) மிக நீண்டத் தொடர்ச்சியான ஒரு இடைவேளையானது பதிவானது.