2016 ம் நிதியாண்டில் இந்தியா 1,423 பில்லியன் யூனிட்கள் மின்சாரத்தை உற்பத்தி செய்து மூன்றாவது மிகப்பெரிய மின்சார உற்பத்தியாளராக உருவாகியுள்ளது மற்றும் மூன்றாவது மிகப்பெரிய மின்சார நுகர்வோராகவும் உள்ளது.
சீனா (6,015 பில்லியன் யூனிட்கள்), அமெரிக்கா (4,327 பில்லியன் யூனிட்கள்) ஆகியவற்றைத் தொடர்ந்து இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது.
கடந்த ஏழு ஆண்டுகளில் 2017 ஆம் ஆண்டு வரையில், இந்தியாவின் மின்சார உற்பத்தி 34% ஆக அதிகரித்துள்ளது.
இந்தியா தற்போது ஜப்பான் மற்றும் இரஷ்யாவைக் காட்டிலும் அதிக ஆற்றலை உற்பத்தி செய்கிறது.