TNPSC Thervupettagam

மூன்று நதிப்படுகைகள் மீதான அச்சுறுத்தல் குறித்த அறிக்கை

November 1 , 2023 261 days 211 0
  • காங்கோ குடியரசின் பிரஸ்ஸாவில் நகரில் மூன்று நதிப்படுகைகள் உச்சி மாநாடு நடைபெற்றது.
  • இது அமேசான், காங்கோ மற்றும் போர்னியோ-மேகாங்/தென்கிழக்கு ஆசியா ஆகிய மூன்று முக்கிய சூழல் அமைப்புகளுக்கான நிர்வாகத்தினை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது.
  • மூன்று நதிப்படுகைகள் மீதான அச்சுறுத்தல் குறித்த அறிக்கை: காடுகள் மற்றும் சமூகங்கள் மீதான புதைபடிவ எரிபொருள், சுரங்கம் மற்றும் தொழில்துறை சார்ந்த விரிவாக்க அச்சுறுத்தல்கள் என்ற அறிக்கையானது சமீபத்தில் வெளியிடப்பட்டது.
  • தென்கிழக்கு ஆசியாவில், எந்தவித செயல்பாடுகளும் மேற்கொள்ளப்படாத சுமார் 20% வெப்ப மண்டல மழைக் காடுகள் ஆனது உற்பத்தி அல்லது ஆய்வுக்காக ஒதுக்கப்பட்ட எண்ணெய் மற்றும் எரிவாயு தொகுதிகளுக்குள் அமைந்துள்ளன.
  • மூன்று நதிப்படுகைகளில் உள்ள 20 சதவீத சேதமடையாத வெப்பமண்டல காடுகள் தற்போது செயலில் உள்ள மற்றும் சாத்தியமான எண்ணெய் மற்றும் எரிவாயு தளங்களாக உள்ளன.
  • மூன்று வெப்பமண்டல வனப் படுகைகளின் முதல் உச்சி மாநாடு ஆனது 2011 ஆம் ஆண்டில் பிரஸ்ஸாவில்லே நகரில் நடைபெற்றது.
  • இது மூன்று வெப்பமண்டல வனப் படுகைகளின் உச்சி மாநாட்டின் பிரகடனத்திற்கு வழி வகுத்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்