28வது பங்குதார நாடுகளின் மாநாட்டின் (COP28) தலைவர் டாக்டர் சுல்தான் அல் ஜாபர், கோபன்ஹேகன் பருவநிலை அமைச்சகத்தில் உலகளாவிய பருவநிலை தலைவர்கள் மற்றும் அமைச்சர்களிடம் உரையாற்றினார்.
உலகளாவியப் பருவநிலை முன்னெடுப்புகளை வலுப்படுத்தும் ஒரு நோக்கில் புதிய வரலாற்று முன்னெடுப்பினை அவர் அறிவித்தார்.
COP28, COP29 மற்றும் COP30 ஆகியவற்றுக்கு இடையே ஒரு நிலையான அணுகுமுறை மற்றும் ஒரு தொடர்ச்சியை உறுதி செய்யும் நோக்கில் முன்வைக்கப்பட்ட மூன்று நாடுகளின் COP தலைமைத்துவம் என்ற கருத்தாக்கம் என்பது ஒரு துணிகரமிக்க முன்னெடுப்பு என்று அல் ஜாபர் விவரித்தார்.
மூன்று நாடுகளின் COP தலைமைத்துவம் என்பது COP28 மாநாட்டினை அடுத்த இரண்டு COP தலைமைத்துவங்களான அஜர்பைஜான் மற்றும் பிரேசில் ஆகிய சில நாடுகளுடன் இணைப்பதற்கான ஐக்கிய அரபு அமீரகத்தின் ஒருமித்த கருத்திற்கான ஒரு முக்கியச் சாதனையாகும்.
தேசிய அளவில் நிர்ணயிக்கப்பட்ட பல்வேறுப் பங்களிப்புகளின் அடுத்த முக்கியமான சுற்று என்பது உலக நாடுகளின் வெப்பமயமாதல் குறைப்பிற்கான ஒரு வழிகாட்டியாக விளங்கும் 1.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை வரம்பு என்ற இலக்கினை அடைவதற்கு ஏற்ப இருப்பதை உறுதி செய்ய இந்த ட்ரொய்கா (மூன்று நாடுகளின் தலைமைத்துவம்) உதவும்.