TNPSC Thervupettagam

மூன்று பெண் நீதிபதிகள் - இந்தியா

August 6 , 2018 2308 days 838 0
  • மதராஸ் உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்த்தப்பட்ட பிறகு, இந்திய நீதித்துறை வரலாற்றில் உச்சநீதிமன்றம் புதிய சாதனையைப் படைத்துள்ளது.
  • முதல் முறையாக உச்சநீதிமன்றம் மூன்று பெண் நீதிபதிகளை கொண்டிருக்கும். அவர்களாவன
    • நீதிபதி R.பானுமதி
    • நீதிபதி இந்து மல்ஹோத்ரா
    • நீதிபதி இந்திரா பானர்ஜி
  • இந்தியக் குடியரசுத் தலைவர் சமீபத்தில் நீதிபதி இந்திரா பானர்ஜி, ஒரிசா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி வினீத் சரண் மற்றும் உத்தரகாண்ட் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி K.M.ஜோசப் ஆகியோரை உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமனம் செய்தார்.
  • நீதிபதி இந்திரா பானர்ஜி உச்சநீதிமன்ற வரலாற்றில் எட்டாவது பெண் நீதிபதியாவார்.
  • இவர் பின்வருபவர்களை தொடர்ந்து பதவியேற்கிறார்.
    • பாத்திமா பீவி
    • சுஜாதா வி மனோகர்
    • ருமா பால்
    • கியான் சுதா மிஸ்ரா
    • ரஞ்சனா பிரகாஷ் தேசாய்
  • தற்சமயம் இந்திய உச்சநீதிமன்றம் 22 நீதிபதிகளைக் கொண்டுள்ளது.
  • நீதிபதி கீதா மிட்டல் ஜம்மு காஷ்மீர் உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டு ஜம்மு காஷ்மீர் உயர்நீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதியாக வரலாறு படைத்துள்ளார்.
 
  • சிந்து சர்மா அம்மாநில உயர்நீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதி என்ற சிறப்பை பெற்றிருக்கின்றார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்