TNPSC Thervupettagam

மூலக்கூறு துளையிடல் விளைவு

April 30 , 2024 208 days 204 0
  • புற்றுநோய் சிகிச்சையில் அறுவைச் சிகிச்சை, கதிர்வீச்சு, கீமோதெரபி (வேதிமுறை நோய் நீக்கம்) மற்றும் நோயெதிர்ப்புச் சிகிச்சை ஆகிய "நான்கு முக்கிய கட்டங்கள்" உள்ளன.
  • புற்றுநோய் செல்கள் ஏறக்குறைய அனைத்து வகையான மரபுவழிச் சிகிச்சைக்கும் எதிர்ப்புத் திறன் கொண்டுள்ளது.
  • நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சையின் பலனை மேம்படுத்த உதவும் வகையிலான இயந்திர முறை சிகிச்சை என்ற மற்றொரு முக்கியப் புற்றுநோய் சிகிச்சை கட்டத்தினை ஆராய்ச்சியாளர்கள் அறிமுகப்படுத்தியுள்ளனர்.
  • சையனைன் எனப்படும் ஒரு வகை மூலக்கூறைப் பயன்படுத்திப் புற்றுநோய் செல்களை அழிக்கும் வழியைக் இக்குழு கண்டறிந்துள்ளது.
  • சையனைன் சாயங்கள் ஆனது அண்மை அகச்சிவப்பு ஒளிக்கு வெளிப்படும் போது வினாடிக்கு 40 டிரில்லியன் அலைவுகளில் அதிர்வுறும்.
  • இந்த மூலக்கூறுகளால் சூழப்பட்ட அனைத்தும் மிக விரைவாக பிரிக்கப்படும்.
  • ஆராய்ச்சியாளர்கள் இதை "மூலக்கூறு துளையிடல்" விளைவு என்று அழைக்கின்றனர்.
  • மனிதக் கரும்புற்றுநோய் (மெலனோமா) செல்கள் மீது மூலக்கூறுத் துளையிடல் என்ற விளைவினைப் பயன்படுத்தி, 100% புற்றுநோய் செல்களை அழிக்க முடிந்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்