பல்கலைக்கழக மானியக் குழுவானது, 2019 ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்ட மூல்யா பிரவாஹ்வின் மாற்றியமைக்கப்பட்ட மூல்யா பிரவாஹ் 2.0 என்ற விதிமுறைகளை வெளியிட்டுள்ளது.
இது உயர்கல்வி நிறுவனங்களில் மனித விழுமியங்களையும் தொழில்முறை நெறிமுறைகளையும் புகுத்த முயல்கிறது.
அடிப்படைக் கடமைகள் மற்றும் அரசியலமைப்பு விழுமியங்கள் மற்றும் நாட்டுடன் பிணைப்பு ஆகியவற்றிற்கான ஆழ்ந்த மரியாதையை உருவாக்குவதற்கு தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களை நோக்குநிலைப்படுத்துவதன் மூலம் மதிப்பு அடிப்படையிலான நிறுவனங்களை உருவாக்குவதை இது நோக்கமாகக் கொண்டு உள்ளது.
மனித வள மேலாளர்களின் ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளபடி, உயர்கல்வி நிறுவனங்களுக்குள் உள்ள பரவலான நெறிமுறையற்ற நடைமுறைகளை இது நிவர்த்தி செய்கிறது.
பாரபட்சம், பாலியல் துன்புறுத்தல், பாலினப் பாகுபாடு, சீரற்ற ஒழுக்கம், இரகசியத் தன்மை இல்லாமை மற்றும் தனிப்பட்ட இலாபத்திற்காக விற்பனையாளர்களுடனான பேரம் ஆகியவை இதில் அடங்கும்.