மாநிலத்தில் உறுப்பு மாற்றத்தை (organ transplants) மேலும் வெளிப்படைத் தன்மையுடையதாய் மாற்றுவதற்கான நோக்கத்தோடு மூளை இறப்பு (Brain death) மருத்துவ வழக்குகளை தீர்மானிப்பதற்காக ஓர் நிலையான இயக்க நடைமுறையை (standard operating procedure-SOP) ஏற்றுக் கொண்டுள்ள நாட்டின் முதல் மாநிலமாக கேரளா உருவாகியுள்ளது.
இந்த நிலையான இயக்க நடைமுறை வழிகாட்டுதல்களின் படி, மூளை இறப்பு வழக்குகளை தீர்மானிப்பதில் மூன்று நிலை மருத்துவ நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டும்.
மூளை இறப்பை தீர்மானிப்பதற்கு பரிசோதனைகளுக்கு முன் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை (precautions) மேற்கொள்ள வேண்டும்.
அப்னியா சோதனை (Apnea Test)- மூளை இறப்பு மதிப்பீட்டின் முக்கிய கூறு.
இந்த நெறிமுறைகளின் படி குறைந்தபட்சம் ஒரு அரசு மருத்துவர் உள்ளடங்கிய 4 மருத்துவர்கள் கொண்ட குழுவிற்கு ஓர் நோயாளியை மூளை இறப்பெய்தியவராக அறிவிக்க அதிகாரமளிக்கப்பட்டுள்ளது.
இந்த நெறிமுறைகளானது மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் தனியார் மருத்துவமனைகள் என இருவகை மருத்துவமனைகளுக்கும் பொருந்தும்.