மூளை நரம்பு உயிரணுப் புற்றுநோயினைக் கண்டறிவதற்கான கருவி
May 7 , 2023 570 days 295 0
சென்னையின் இந்தியத் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர்கள் மூளை மற்றும் முதுகுத் தண்டு வடத்தில் உள்ள வீரியமிக்கப் பரவக் கூடிய கட்டிகளைக் கண்டறிவதற்காக என்று இயந்திர கற்றல் அடிப்படையிலான மதிப்பீட்டுக் கருவியினை உருவாக்கியுள்ளனர்.
இது மூளை நரம்பு உயிரணுப் புற்றுநோயின் பல்வடிவக் கடத்திகள் (GBMDriver) என்று அழைக்கப் படுகிறது.
மூளை நரம்பு உயிரணுப் புற்றுநோய் என்பது குறிப்பிட்டச் சிகிச்சை வாய்ப்புகளை மட்டுமே கொண்ட, வேகமாகவும் தீவிரமாகவும் வளரும் ஒருவித கட்டியாகும்.
இது ஆரம்பநிலையிலேயே நோய் கண்டறியப்பட்டதிலிருந்து இரண்டு வருடங்களுக்கும் குறைவான காலத்திற்கு உயிர் வாழ்வதற்கான வாய்ப்பினைக் கொண்டது.