TNPSC Thervupettagam

மூளை மின்னலை வரைவு நுட்பத்தின் 100 ஆண்டுகள் நிறைவு (EEG)

July 20 , 2024 10 hrs 0 min 67 0
  • மனித மூளை பற்றிய தகவல்களை அறிய உதவுகிற EEG (மூளை மின்னலை வரைவு) என்பது இயற்பியல் மற்றும் நரம்பணுவியலின் ஒரு சிறந்த அம்சமாகும்.
  • 1875 ஆம் ஆண்டில், பிரிட்டிஷ் மருத்துவர் ரிச்சர்ட் கேட்டன் குரங்குகள் மற்றும் முயல்களின் மூளையில் மின்சாரம் செயல்படுவதற்கான பல்வேறு ஆதாரங்களை வெளியிட்டார்.
  • 1912 ஆம் ஆண்டில், விளாடிமிர் பிராவ்டிச்-நெமின்ஸ்கி ஒரு நாயின் மூளையின் மூளை மின்னலை வரைவினை எடுத்ததன் மூலம் பாலூட்டி இனத்தில் எடுக்கப்பட்ட ஒரு EEG வரைவினை உருவாக்கினார்.
  • அவருக்குப் பிறகு 1924 ஆம் ஆண்டில் ஹான்ஸ் பெர்கர் என்பவர் மனிதர்களில் இந்த வரைவினை எடுத்தார்.
  • EEG என்பது மூளை மின்னலை வரைவினைக் குறிக்கிறது என்ற நிலையில் இதில் ‘எலக்ட்ரோ’ என்பது மின்சாரம் தொடர்பானது.
  • EEG ஆனது மூளையில் நியூரான்களால் உருவாகும் மின்னியல் செயல்பாட்டை அளவிடுகிறது.
  • மூளையில் விரைவான மின் செயல்பாட்டை மில்லி விநாடிகளின் அளவில் கண்காணிப்பதில் மற்ற கண்டறியும் சாதனங்களை விட இது சிறந்ததாக உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்