மூளையை உண்ணும் அமீபா தொற்று
July 10 , 2024
136 days
312
- அரிய, ஆனால் அபாயகரமான அமீபிக் மெனிங்கோஎன்செபாலிடிஸ் (PAM) அமீபா தொற்றினால் நான்கு பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக கேரளா அறிவித்துள்ளது.
- அமீபிக் மெனிங்கோஎன்செபாலிடிஸ் அல்லது PAM ஆனது நெக்லேரியா ஃபோலரால் ஏற்படுகிறது.
- இந்த அமீபா வெதுவெதுப்பான நன்னீர் ஏரிகள், குளங்கள் மற்றும் ஆறுகளில் செழித்து வளரும்.
- இது அரிதான சந்தர்ப்பங்களில் மோசமாக பராமரிக்கப்படும் நீச்சல் குளங்களிலும் உயிர் வாழக் கூடியது.
- அமீபா மூக்கு வழியாக உடலுக்குள் சென்று மூளையை அடைகிறது.
- இது மூளையைப் பாதித்து அங்குள்ள திசுக்களை அழிக்கக் கூடியது என்பதால், இந்த ஒரு செல் உயிரினம் ‘மூளையை உண்ணும் அமீபா’ என்றும் அழைக்கப்படுகிறது.
- இந்த நோய்த்தொற்றுகள், அரிதாக இருந்தாலும், ஆபத்தானவை என்பதோடு இந்தத் தொற்று ஏற்பட்ட 97% நோயாளிகள் உயிர் பிழைக்க இயலாது.
Post Views:
312