தென் கொரிய நாடானது, நாட்டில் நெக்லேரியா ஃபவ்லேரி அல்லது "மூளை உண்ணும் அமீபாவின்" முதல் நோய்த் தொற்று பதிவானதை உறுதி செய்துள்ளது.
நெக்லேரியா என்பது ஓர் அமீபா மற்றும் ஒரு செல் உயிரினம் என்பதோடு, இது இந்த வகை இனங்களில் காணப்படும் இத்தகைய ஒரே வகையாகும்.
இது முதன்முதலில் 1965 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவில் கண்டுபிடிக்கப் பட்டது.
இது பொதுவாக வெந்நீர் ஊற்றுகள், ஆறுகள் மற்றும் ஏரிகள் போன்ற சூடான நன்னீர் வாழிடங்களில் காணப்படுகிறது.
அமீபா மூக்கு வழியாக மனித உடலில் நுழைந்து பின்னர் மூளை வரை பரவுகிறது.
நெக்லேரியா ஃபவ்லேரி மூளைக்குச் சென்றவுடன், அது மூளை திசுக்களை அழித்து, முதன்மை அமீபிக் மெனிங்கோஎன்செபாலிடிஸ் (PAM) எனப்படும் ஆபத்தான தொற்று நோயை ஏற்படுத்துகிறது.