"Echoes of Tradition" என்ற ஒரு கருத்துருவில் நடைபெற்ற 2024 ஆம் ஆண்டு மெ·காங் திருவிழாவானது, காரோ மக்களின் மிகவும் வளமானப் பாரம்பரியம் மற்றும் பழக்க வழக்கங்களைக் கொண்டாடியது.
மேற்கு காரோ மலைக் குன்றுகளின் ஜெங்ஜால் என்னுமிடத்தில் அமைந்த பால்ஜெக் விமான நிலையத்தில் இந்த இரண்டு நாட்கள் அளவிலான நிகழ்ச்சி நடைபெற்றது.
காரோ மலைக் குன்றுகள் மேகாலயாவில் உள்ள ஒரு மலைப் பகுதியாகும்.
இது அதன் வளமான கலாச்சாரப் பாரம்பரியத்திற்காக அறியப்படுகிறது.