நாசாவின் மெகெல்லன் ஆய்வுக் கலம் ஆனது, 1990 ஆம் ஆண்டில் வெள்ளிக் கிரகத்தினை அடைந்து, அந்தக் கிரகத்தின் முழு மேற்பரப்பையும் வரைபடமாக்கிய முதல் விண்கலமாகும்.
இது 1994 ஆம் ஆண்டு அக்டோபர் 12 ஆம் தேதியன்று வெள்ளிக் கிரகத்தின் வளிமண்டலத்தில் அமிழ்ந்து போனது.
அதற்குப் பிறகு, வெள்ளிக் கிரகத்தினை ஆய்வு செய்ய வேறு எந்த விண்கலமும் அனுப்பப் படவில்லை.
அதன் தரவுகளை ஆய்வு செய்ததன் மூலம், ஆயிரக்கணக்கான எரிமலைகளைக் கொண்ட, நமது சூரிய மண்டலத்தில் உள்ள பூமியைப் போன்ற மிக அருகில் அமைந்த கிரகமான வெள்ளி இன்னும் செயலில் இருக்கக்கூடும் என்று அறியப்படுகிறது.
இந்தக் கிரகத்தில், 1990 மற்றும் 1992 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் எரிமலை செயல்பாடுகள் நிகழ்ந்தன.
கடந்த ஆண்டு மார்ச் மாதம், கிரகத்தின் ஒரு எரிமலை துளையானது அதன் வடிவத்தை மாற்றி, ஒரு வருடத்தில் அதன் அளவு கணிசமாக அதிகரித்திருப்பதை அறிவியலாளர்கள் கவனித்தனர்.
2031 ஆம் ஆண்டில், வெள்ளிக் கிரகத்தினை ஆய்வு செய்ய VERITAS என்று பெயரிடப் பட்ட புதிய ஆய்வுக் கலத்தினை அனுப்ப நாசா திட்டமிட்டுள்ளது.