TNPSC Thervupettagam

மெக்கன்ஸே உலகளாவிய நிறுவனத்தின் ஆசிய பசிபிக் பிராந்தியத்திற்கான அறிக்கை

June 28 , 2018 2346 days 699 0
  • மெக்கன்ஸே உலகளாவிய நிறுவனத்தின் ஆசிய பசிபிக் பிராந்தியத்திற்கான சமீபத்திய அறிக்கையின் படி, இந்தியாவில் பாலின சமத்துவமின்மையானது வேலை செய்யும் இடத்தில் மிகவும் அதிக அளவில் உள்ளது. சட்டப் பாதுகாப்பு மற்றும் அரசியல் பங்கேற்பு ஆகியவற்றின் அடிப்படையிலும் பாலின சமத்துவமின்மை காணப்படுகிறது.
  • பாலின சமத்துவமின்மையில் இந்தியாவின் மதிப்பெண் ஆனது வேலை செய்யும் இடத்தில் 30 ஆகவும், சட்டப் பாதுகாப்பு மற்றும் அரசியல் பங்கேற்பு அடிப்படையில் 0.78 ஆகவும் உள்ளது.
  • GPS (GPS-Gender Parity Score) -ன் அனைத்து நான்கு வகையிலும் ஆசியா பசிபிக் சராசரியை விட இந்தியா பின்தங்கியுள்ளது. ஆனால் வங்காள தேசம் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் முன்னிலையில் உள்ளது.
  • இந்த அறிக்கையானது பாலின சமநிலை மதிப்பெண் அடிப்படையில் சமநிலையை மதிப்பிட்டுள்ளது. GPS-ஆனது வேலை மற்றும் சமுதாயத்தில் நான்கு பரந்த பிரிவுகளின் கீழ் பாலின சமநிலையின் 15 குறிகாட்டிகளைப் பயன்படுத்துகிறது.
  • இந்த நாடுகளின் மதிப்பெண் 0 (குறிப்பிடப்படுகிற சமநிலையின்மை) முதல் 1 (குறிப்பிடப்படுகிற சமநிலை) வரை இருக்கும். இந்த மதிப்பெண் அடிப்படையில் நாடுகள் தரநிலைப்படுத்தப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்