மெக்கென்சி நதியில் வரலாறு காணாத அளவிற்கு நீர்மட்ட வீழ்ச்சி
July 17 , 2024 129 days 204 0
கனடாவின் மிக நீளமான நதியான மெக்கென்சி நதியின் நீர் மட்டம் வரலாறு காணாத அளவிற்குக் குறைந்து வருகிறது.
கிரேட் ஸ்லேவ் ஏரியிலிருந்து தொடங்கி பியூஃபோர்ட் கடல் வரை பாயும் மெக்கன்சி நதி 1,738 கிலோமீட்டர் நீளம் கொண்டது.
இதன் நீர்ப்பிடிப்புப் பகுதியானது சுமார் ஐந்து மாகாணங்கள் மற்றும் பிரதேசங்களின் பகுதிகளை உள்ளடக்கியது.
மெக்கென்சியும் அதன் துணை நதிகளும் சேர்ந்து சுமார் 1.8 மில்லியன் சதுர கி.மீ பரப்பளவிற்கான பகுதிகளுக்கு நீர்ப்பாசனத்தினை வழங்குகின்றன என்ற நிலையில் இது கனடாவின் மொத்த நிலப்பரப்பில் 20% ஆகும்.
அதாபாஸ்கா ஏரி, கிரேட் ஸ்லேவ் ஏரி மற்றும் கிரேட் பியர் ஏரி ஆகியவை மெக்கென்சி நதி அமைப்பின் முக்கியப் பகுதிகளாகும்.