மெக்சிகோ நாட்டு அரசானது, தனது அரசியலமைப்பைத் திருத்தி, உள்நாட்டுச் சோள வகையினை தேசிய அடையாளத்தின் ஓர் அங்கமாக அங்கீகரித்து, மரபணு மாற்றப் பட்ட (GM) விதைகளை நடுவதைத் தடை செய்துள்ளது.
இந்தப் பயிர் ஆனது சுமார் 9,000 ஆண்டுகளுக்கு முன்பு மெசோ அமெரிக்க நாட்டு விவசாயிகள் டீயோசின்டே எனப்படும் காட்டுப் புல் வகையினை வளர்த்ததன் மூலம் மெக்சிகோவில் தோன்றியது.
அப்போதிலிருந்து இந்தச் சோள வகையானது மெக்சிகோ நாட்டவரின் வாழ்க்கையின் முக்கிய உணவாக உள்ளது.
1990 ஆம் ஆண்டுகளின் முற்பகுதியில் 3.1 மில்லியன் மெட்ரிக் டன்னாக இருந்த சோள இறக்குமதி ஆனது, இன்று சுமார் 23.4 மில்லியன் மெட்ரிக் டன்னாக உயர்ந்துள்ளது.