TNPSC Thervupettagam

மெட்-டெக் மாநாடு

December 5 , 2017 2545 days 821 0
  • 11-வது வருடாந்திர மெட்டெக் மாநாடு உயிரி - வடிவமைப்பு திட்டத்தின் (Bio Design Programme) கீழ் டெல்லியில் அண்மையில் நடத்தப்பட்டது.
  • எய்ம்ஸ், டெல்லி ஐஐடி மற்றும் சர்வதேச பங்கேற்பாளர்களோடு இணைந்து மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் வரும் மத்திய உயிர் தொழில்நுட்பத் துறை ஆனது உயிரி வடிவமைப்பு திட்டத்தை செயல்படுத்துகின்றது.

இத்திட்டத்தின் நோக்கங்களாவன

  • இந்தியாவில் இல்லாத மருத்துவ சாதனங்களின் தேவைகளுக்கு ஏற்ப மலிவான மற்றும் புதுமையான மருத்துவ சாதனங்களை உருவாக்குதல்.
  • இந்திய மருத்துவ உலகிற்கு புதிய மருத்துவ சாதனங்களை கொண்டு வருவதற்கு அடுத்த தலைமுறை மருத்துவ சாதனங்கள் கண்டுபிடிப்பாளர்களுக்கு பயிற்சி அளித்தல்.
  • இந்த மாநாட்டின்போது நோசேனோ (Noxeno) எனும் சுவாச வழியிலான அயல் பொருட்கள் நுழைவதை தடுக்கும் சாதனம். வெளியிடப்பட்டது.
  • இந்த சாதனம் உயிரி வடிவமைப்பு திட்டத்தின் கீழ் பயிற்சி அளிக்கப்பட்ட InnAccel தொழில்நுட்பம் எனும் தனியார் நிறுவனத்தால் கண்டுபிடிக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்