மெத்திலோபாக்டீரியம் அஜ்மலி
March 26 , 2021
1218 days
582
- ஹைதராபாத் பல்கலைக்கழகம் நாசாவின் ஆராய்ச்சியாளர்களுடன் இணைந்து சர்வதேச விண்வெளி நிலையத்தில் ஒரு புதிய பாக்டீரிய வகையைக் கண்டறிந்து உள்ளது.
- அவர்கள் மெத்திலோ பாக்டீரியாசியா என்ற குடும்பத்தைச் சார்ந்த பாக்டீரியாவை கண்டறிந்துள்ளனர்.
- இதற்கு சூட்டப்பட்ட பெயர் மெத்திலோபாக்டீரியம் அஜ்மலி என்பதாகும்.
- இதற்கு இந்தியப் பல்லுயிர்ப் பெருக்க அறிவியலாளர் சையத் அஜ்மல் கானின் பெயர் சூட்டப் பட்டுள்ளது.
- சையத் அஜ்மல் கான், தமிழ்நாட்டில் உள்ள அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் ஒரு பேராசிரியராவார்.
Post Views:
582