TNPSC Thervupettagam

மென்சா நுண்ணறிவு திறன் போட்டி

January 29 , 2018 2362 days 868 0
  • இங்கிலாந்திலுள்ள இந்திய வம்சாவளி சிறுவனான மெஹீல் கார்க் மென்சா நுண்ணறிவுத் திறன் சோதனைப் போட்டியில் அதிக மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார்.
  • மென்சா அமைப்பின் உறுப்பினராவதற்கு இச்சிறுவன் நுண்ணறிவுத் திறன் போட்டியில் 162 மதிப்பெண்களை பெற்றுள்ளானர்.
  • உலகின் புகழ்பெற்ற ஆராய்ச்சியாளர்களான ஐன்ஸ்டின் மற்றும் ஹாக்கிங்ஸை காட்டிலும் இச்சிறுவன் இரு புள்ளிகள் அதிகம் பெற்றுள்ளானர்.
  • மென்சா அமைப்பானது உலகின் மிகப்பெரிய மற்றும் பழமையான உயரிய நுண்ணறிவுத் திறனிற்கான சங்கமாகும்.
  • 1946ஆம் ஆண்டு இங்கிலாந்தின் லின்கோன்ஷைரில் இச்சங்கம் அமைக்கப்பட்டது.
  • மனித குலத்தின் பயனிற்காக மனித நுண்ணறிவுத்திறனை அடையாளப்படுத்துவதும், வளர்ப்பதும் மென்சா சொசைட்டியின் நோக்கமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்