TNPSC Thervupettagam

மென்பானங்களுக்கான சர்க்கரை வரி - இங்கிலாந்து

April 23 , 2018 2311 days 682 0
  • மென் பானங்களுக்கான சர்க்கரை வரி (soft drinks sugar tax) அல்லது தீமை வரி (sin tax)   அல்லது சர்க்கரை வரி (sugar tax) என்றழைக்கப்படும் மென்குளிர்பான தொழிற்சாலை வரிவிதிப்பானது (Soft Drinks Industry Levy)  இங்கிலாந்தில் அமல்பாட்டிற்கு வந்துள்ளது.
  • சர்க்கரை சார்ந்த நோய்கள் (sugar related disease) மற்றும் உடல் பருமனை (obesity)  தடுப்பதற்கான அரசினுடைய திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த சர்க்கரை வரிவிதிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
  • இந்த சர்க்கரை வரி விதிப்பின் அறிமுகத்தின் மூலம் இதேபோலான கொழுப்பு வரிகளை (fat taxes) அறிமுகப்படுத்தியுள்ள மெக்ஸிகோ, பிரான்ஸ், நார்வே ஆகிய நாடுகள் அடங்கிய  குழுவில் இங்கிலாந்து  இணைந்துள்ளது.
  • இங்கிலாந்தில் 2016 ஆம் ஆண்டு மென்பான தொழிற்சாலை வரிவிதிப்பு அறிவிக்கப்பட்டது.
  • மென்குளிர்பானங்களில் உள்ள சர்க்கரையினுடைய அளவின் அடிப்படையில் அவற்றின் மீது  வரி விதிக்கப்படும்.
  • இந்த வகையில் இங்கிலாந்தில் உள்ள பெரும்பான்மையான குளிர் பானங்கள் உயர்ந்த பட்ச அளவிலான வரிகளை கட்டி வருகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்