TNPSC Thervupettagam

மெய்தே சமூகத்தினரின் பட்டியலிடப்பட்டப் பழங்குடியினர் அந்தஸ்து

May 8 , 2023 439 days 229 0
  • மெய்தே சமூகத்தின் பட்டியலிடப்பட்டப் பழங்குடியினர் (ST) அந்தஸ்துக்கான கோரிக்கை சமீபத்தில் ஒரு ஊக்கத்தைப் பெற்றது.
  • மணிப்பூர் உயர் நீதிமன்றமானது, இதற்கான பரிந்துரையை அனுப்புமாறு அம்மாநில அரசுக்கு உத்தரவிட்டதையடுத்து இதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப் படுகிறது.
  • இந்திய அரசானது, அதன் பல்வேறு உறுதிப்பாடு மிக்க செயல் திட்டத்தின் ஒரு பெரு நோக்கத்திற்காக 'பிற்படுத்தப்பட்டச் சமூகங்களின் மூன்று பட்டியல்களைப் பேணி வருகிறது.
  • அனைத்துச் சாதிகள் மற்றும் பழங்குடியினர், இந்த மூன்று பட்டியல்களில் (பட்டியலிடப் பட்டப் பழங்குடியினர், பட்டியலிடப்பட்டச் சாதியினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்) ஏதேனும் ஒன்றில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
  • 1950 ஆம் ஆண்டுகளில் இந்திய அரசினால் பட்டியலிடப்பட்டப் பழங்குடியினர் பட்டியல் வரையறுக்கப்பட்ட போது பட்டியலிடப்பட்டப் பழங்குடியினர் அந்தஸ்துக்கான அளவுருக்களை மெய்தே சமூகம் பூர்த்தி செய்யவில்லை.
  • மணிப்பூர் மாநிலம் மெய்தே, நாகா மற்றும் குக்கி ஆகிய மூன்று முக்கிய இனக் குழுக்களைக் கொண்டுள்ளது.
  • மணிப்பூர் மாநிலத்தில் 30க்கும் மேற்பட்டச் சமூகங்கள் பட்டியலிடப்பட்டப் பழங்குடி இனத்தவராக பட்டியலிடப்பட்டுள்ளன.
  • இந்த இனத்தவர்கள், 2011 ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் படி மொத்த மக்கள்தொகையில் 40.88% உள்ள குக்கி அல்லது நாகா இனக்குழுக்களைச் சேர்ந்த மக்கள் ஆவர்.
  • மெய்தே இனத்தவர்கள் பெரும்பாலும் பள்ளத்தாக்குப் பகுதியில் வாழ்கின்ற நிலையில் நாகா மற்றும் குக்கி பழங்குடியினர் பள்ளத்தாக்கைச் சுற்றியுள்ள மலைப் பகுதிகளில் வாழ்கின்றனர்.
  • நாகாக்கள் மற்றும் குக்கி இனத்தவரின் ஒட்டு மொத்த மக்கள்தொகையை விட மெய்தே இனத்தவரின் மக்கள் தொகை அதிகமாகும்.
  • இந்தப் பள்ளத்தாக்குப் பகுதியானது, சுமார் 10% புவியியல் பரப்பளவைக் கொண்டு இருந்தாலும், அந்த மாநிலத்தின் பெரும்பான்மையான மக்கள் அங்குதான் வாழச் செய்கின்றனர்.
  • அம்மாநிலச் சட்டமன்றத்திலும் மெய்தே இனத்தவர் அதிக இடம் பெற்றுள்ளனர்.
  • 60 உறுப்பினர்களைக் கொண்ட சட்டசபையில், 40 சட்டமன்ற உறுப்பினர்கள் பள்ளத் தாக்குப் பகுதிகளிலிருந்துத் தேர்ந்தெடுக்கப்படுகின்ற ஒரு நிலையில், 20 பேர் மலைப் பகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப் படுகிறார்கள்.
  • மெய்தே இனத்தவர்கள் பட்டியலிடப்பட்டப் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கப் பட்டால் மணிப்பூரில் உள்ள அனைத்துச் சமூகங்களும் பட்டியலிடப்பட்டப் பழங்குடி மக்கள் அந்தஸ்தினைப் பெறுவர்.
  • பட்டியலிடப்பட்டப் பழங்குடியினர் அரசியலமைப்பின் 342வது பிரிவின் கீழ் அறிவிக்கப் படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்