மெய்நிகர் நாணயங்கள் மீதான அமைச்சகங்களுக்கிடையே குழுவானது, “மெய்நிகர் நாணயத்தின் தடை & அதிகாரப்பூர்வ டிஜிட்டல் நாணய ஒழுங்குமுறை மசோதா, 2019” என்பதுடன் சேர்த்து தனது அறிக்கையையும் சமர்ப்பித்துள்ளது.
இது இந்தியாவின் மெய்நிகர் நாணயங்கள் தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் மீது அபராதம் விதிக்கவும் அவற்றை அதிகாரப் பூர்வமாகத் தடை செய்யவும் பரிந்துரைத்துள்ளது.
ஆனால் இது “அதிகாரப்பூர்வ டிஜிட்டல் நாணயத்தை வெளியிடுவதை” அரசாங்கம் பரிசீலிக்க வேண்டும் என்று கூறியுள்ளது.
இது “தொடரேட்டுத் தொழில்நுட்பம்” என்று பொதுவாக அறியப்படும் விநியோகிக்கப்பட்ட - பெயரேட்டுத் தொழில்நுட்பத்தின் (DLT - distributed-ledger technology) நேர்மறைப் பகுதியை எடுத்துக் காட்டுகின்றது.
நிதிச் சேவைகள் துறையில் DLT மிகப்பெரிய பயன்பாட்டைக் கொண்டுள்ளது. உதாரணம் - கடன் வழங்குதல் மீதான கண்காணிப்பு.