மெய்ன் நஹீம் ஹம் என்ற இணைய தளம் மற்றும் செயலியை பிரதமர் நரேந்திர மோடி அறிமுகப்படுத்தினார்.
மெய்ன் நஹீம் ஹம் என்ற தளமானது “Self4Society” என்ற கருத்துருவுடன் செயல்படும்.
தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் அமைப்புகள் தங்களின் சமூகப் பணிகள் மற்றும் சமூக சேவைகள் குறித்த முயற்சிகளை ஒன்றிணைத்து அளிப்பதற்கு தகவல் தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு உதவுவதற்காக ஒற்றைத் தளமாக இது செயல்படும்.
இது சமுதாயத்தில் கீழ்நிலையில் உள்ள மக்களுக்கு சேவையளிப்பதற்கான ஒத்துழைப்பை தொழில்நுட்பத்தின் மூலம் அதிகரிக்கின்றது.