சீனாவின் பெய்ஜிங்கில் 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 13 முதல் ஆகஸ்ட் 17-வரை மெய்ப் பொருளியலின் 24வது உலக காங்கிரஸ் (24th World Congress of Philosophy) மாநாடு நடைபெற்றது.
இம்மாநாட்டை தத்துவ சமுதாயங்களின் சர்வதேச மன்றம் மற்றும் பீக்கிங் பல்கலைக்கழகம் ஆகியவை இணைந்து நடத்தியது. இதன் கருத்துரு ‘மனிதனாக இருப்பதற்கு கற்பது’ ஆகும்.
இந்தக் காங்கிரஸ் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும். சீனாவில் முதன் முறையாக இக்காங்கிரஸ் மாநாடு நடைபெற்றது.
இந்த காங்கிரஸ் முதன்முறையாக 1900 ஆம் ஆண்டு பிரான்ஸின் பாரிஸில் நடைபெற்றது. அதன் பின்னர் உலகில் நடைபெறும் மிகப் பெரிய தத்துவம் சார்ந்த நிகழ்ச்சிகளில் இதுவும் ஒன்றாக உருவெடுத்துள்ளது.
வெவ்வேறு நாடுகளில் உள்ள இதில் உறுப்பினராக அங்கும் வகிக்கும் சமுதாயங்களில் ஏதேனும் ஒரு சமுதாயம் உலக காங்கிரஸ் மாநாட்டை நடத்தும் பொறுப்பினை மேற்கொள்ளும்.