TNPSC Thervupettagam

மெய்ரா பைபிஸ்

July 7 , 2023 379 days 307 0
  • மெய்ரா பைபிஸ் அமைப்பானது, மாஸ் அல்லது மணிப்பூரின் தாய்மார்கள் என்றும் அழைக்கப் படுகிறது.
  • இம்பால் பள்ளத்தாக்குப் பகுதியில் உள்ள சமூகத்தின் அனைத்துப் பிரிவுகளைச் சேர்ந்த இந்த அமைப்பினர் பெருமளவில் மதிக்கப் படுகின்ற மற்றும் ஒரு சக்தி வாய்ந்த தார்மீக சக்தியைப் பிரதிபலிக்கின்ற மெய்தி இனப் பெண்கள் ஆவர்.
  • அந்தக் குழுவினர் தெருக்களில் மேற்கொள்ளும் அணிவகுப்பின் போது, பெரும்பாலும் இரவில் எரியும் தீப்பந்தங்களை ஏந்திச் செல்வர் என்பதால், அவர்கள் “பெண் வழி காட்டி (ஒளிகாட்டி)” என்று அழைக்கப் படுகிறார்கள்.
  • மெய்ரா பைபிஸ் சரியான முறையில் ஒழுங்கமைக்கப்படாத ஒரு அமைப்பாகும்.
  • ஒரு கடுமையான அதிகாரப் படிநிலை அல்லது கட்டமைப்பு அல்லது ஒரு வெளிப்படையான அரசியல் சார்பு கொண்டில்லாத அக்குழுவினர் வழக்கமாக மூத்தப் பெண்கள் அடங்கிய குழுக்களால் வழி நடத்தப் படுகிறார்கள்.
  • மெய்ரா பைபி அமைப்பு 1977 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது.
  • இது உலகின் மிகப்பெரிய கடைமட்ட இயக்கங்களில் ஒன்றாகும்.
  • குடிப்பழக்கம் மற்றும் போதைப்பொருட்களின் தவறான பயன்பாடு ஆகியவற்றினை எதிர்த்துப் போராடுதல் போன்ற அதன் ஆரம்பகட்ட இலக்குகளைக் கொண்ட இந்த அமைப்பானது, தற்போது மனித உரிமை மீறல்களை எதிர்த்தல், சமூகத்தின் ஒட்டு மொத்த மேம்பாடு ஆகியவற்றிலும் ஈடுபாடு செலுத்த உள்ளது.
  • மீரா பைபி பெண்கள் அமைப்பானது, இரோம் ஷர்மிளாவின் தீவிர ஆதரவாளர்கள் அமைப்பாகும்.
  • இவர் ஆயுதப் படைச் சிறப்பு அதிகாரச் சட்டத்திற்கு (AFSPA) எதிர்ப்பு தெரிவித்து 2000 முதல் 2016 ஆம் ஆண்டு வரை அந்த மாநிலத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டவர் ஆவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்