வங்காள விரிகுடா கடற்கரையை ஒட்டிய திகா, தலசாரி-உதய்ப்பூர் மற்றும் அதற்கு அருகில் உள்ள பகுதிகளில் புதிய வகை தலை-கவசம் கொண்ட கடல் தட்டை மீன்கள் இனம் ஒன்றை விலங்கியல் நிபுணர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
இதற்கு மெலனோக்லமிஸ் பெங்காலென்சிஸ் என்று பெயரிடப்பட்டுள்ளது.
இந்தப் புதிய இனங்கள் ஆனது, அதே குடும்பத்தினைச் சேர்ந்த மற்ற இனங்களுடன் ஒப்பிடும் போது ஒரு தனித்துவமான உயிரினக் கிளை இனத்தினைக் குறிக்கின்றன.
இது 14 மி.மீ. வரை நீளம் கொண்ட ஒரு சிறிய கடல் தட்டை மீன்கள் என்பதோடு, அது தனது உடலின் உள்ளே ஓடுனுடனும் முதுகெலும்பு அற்றும் காணப்படுகிறது.
இந்த குடும்பத்தினைச் சேர்ந்த 17 இனங்கள் உலகம் முழுவதும் காணப்படுகின்றன.
இந்த இனங்கள் அனைத்தும் பொதுவாக இந்திய-பசிபிக் பெருங்கடல் மண்டலத்தின் மித வெப்ப மண்டலப் பகுதிகளில் பரந்துக் காணப்படுகின்றன.
தாய்லாந்து வளைகுடாவில் கண்டுபிடிக்கப்பட்ட மெலனோக்லமிஸ் பாப்பிலாட்டா என்ற இனத்தினை அடுத்து பதிவு செய்யப்பட்ட இரண்டாவது வெப்பமண்டல இனம் இதுவாகும்.